பழங்களை மட்டும் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறுங்கள். பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். நொறுக்குத்தீனி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. பழங்களையே நொறுக்கு தீனிபோல சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ், கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை அழகாக கட் செய்து அலங்கரித்தால் சுவையான நொறுக்குத்தீ...